Friday,1st of March 2013
சென்னை::என் சினிமா பயணத்தில் கோச்சடையான் படம் திருப்புமுனையாக அமையும் என நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஜாக்கிஷராப், சரத்குமார், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கும் கோச்சடையான் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் தொடங்கி திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களாக லண்டன், சென்னை ஆகிய இடங்களில் கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், படத்தின் கதாசிரியர் கே.எஸ் ரவிக்குமார், படத்தின் இயக்குநர் செüந்தர்யா ஆர். அஷ்வின் உள்ளிட்ட படக் குழுவினர் கோச்சடையான் படத்தை வியாழக்கிழமை பார்த்தனர்.
படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் இயக்குநரும் தன் மகளுமான செüந்தர்யாவை வெகுவாக பாராட்டியதுடன் தன் சினிமா பயணத்தில் கோச்சடையான் படம் மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்ட வேலைகளான டப்பிங், ரீரெக்கார்டிங், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பணிகள் மார்ச் மாதம் 15ம் தேதி தொடங்கி லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் நடைபெறும் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment