Sunday,31st of March 2013
சென்னை::சினிமாவில் த்ரிஷா நடிக்க வந்து பத்து ஆண்டுகளாக பிசியாக இருந்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலந்து நடித்தவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தார். அதிரடியான கிளாமரை வாரி இறைக்கவில்லை. என்
றபோதும், அவர் நடித்த படங்களின் வெற்றி காரணமாக, முன்னணி நடிகர்களின் பேவரிட் ஹீரோயினியாக விளங்கினார் த்ரிஷா. இதற்கிடையே பலவிதமான காதல், கல்யாண கிசுகிசுக்கள் என அனைத்தையும் கடந்து, இப்போதும் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி த்ரிஷா கூறுகையில், பத்து வருடங்களாக பரபரப்பாக இருந்தேன். வீட்டுக்கு வரகூட நேரம் கிடைக்காமல் ஸ்டுடியோக்களிலேயே முடங்கியிருந்த காலம் அது. இரண்டு நாள் படப்பிடிபபு இல்லையென்றால் நன்றாக தூங்கலாமே என்ற ஆசைகூட வரும். ஆனால் தூங்கத்தான் நேரம் கிடைக்காது. பாதி தூக்கத்தில் எழுந்து ஓடவேண்டியிருக்கும்,. அந்த அளவுக்கு ஓடி ஓடி உழைத்தேன். ஆனால், இப்போது அந்த ஓட்டத்தை நானே குறைத்து விட்டேன். காரணம், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை குறைந்து விட்டதுதான். குறைவான படங்கள் என்றாலும் பேசப்படும் கதைகளாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறேன்.
இதனால் பரபரப்பு குறைஞ்சிருக்கிறது. மனதில் அமைதியும், ஓய்வும் கிடைத்துள்ளது. நிறைய யோசிக்க முடிகிறது. அதனால் இனி நான் குறைவான படங்களாகவே நடிப்பேன். ஆனபோதும், அப்படி நான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு படமும் பேசப்படக்கூடியதாகவே இருக்கும் என்கிறார் த்ரிஷா.
Comments
Post a Comment