கோச்சடையான்’ டப்பிங் பேசிய ரஜினிகாந்த்!!!

Saturday,30th of March 2013
சென்னை::ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் நடிக்க ‘3டி மோஷன் கேப்சரிங்’ திரைப்படமாக உருவாகி வரும் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்காக ரஜினிகாந்த் சமீபத்தில் ‘டப்பிங்’ பேசினார். அரை நாளிலேயே பாதி படத்திற்கும் மேலாக ரஜினிகாந்த் டப்பிங் பேசினாராம். படத்தின் சவுன்ட் இஞ்சினியராக ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் கே.எஸ். ரவிகுமார் இயக்கம் மேற்பார்வையில் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் படம் கோச்சடையான்.

மே மாதம் படத்தின் இசை வெளியீடும், அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீடும் இருக்கும் எனத் தெரிகிறது.

Comments