காதலுக்கு உதவுவது காமெடியன்கள்தான்: விவேக்!!!


Sunday,3rd of March 2013
சென்னை::தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் படம், ‘சந்தரா’. ஸ்ரேயா, கணேஷ் வெங்கட்ராமன், பிரேம், விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரூபா அய்யர் இயக்கியுள்ள இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது விவேக் பேசியதாவது: இயக்குனர் ரூபா அய்யர், என்னை கன்னடத்தில் பேச வைத்து, காமெடி செய்யச் சொன்னார். பயமாக இருந்தது. வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் காதலிப்பார்கள். அவர்களுக்கு காமெடி நடிகர் கடைசிவரை உதவி செய்வார். ஆனால், அவர்கள்தான் டூயட் பாடுவதற்கு சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளுக்கு பறப்பார்கள். ஆனால், இந்தப்படத்தில் என்னையும் நியூயார்க் மற்றும் நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்று இயக்குனர் நடிக்க வைத்தார். இளவரசி கேரக்டருக்கு ஸ்ரேயா மிகவும் பொருத்தமாகவும், அழகாகவும் இருந்தார். படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்துள்ளேன். கவுதம் ஸ்ரீவத்சவா நல்ல இசையைக் கொடுத்துள்ளார். பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். ஸ்ரேயா, பிரேம், கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், பாபு கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஐஸ்வர்யா தொகுத்தார்.

Comments