போதையுடன் குத்தாட்டம் போடும் நீதுசந்திரா!!!

Saturday,2nd of March 2013
சென்னை::தீராத விளையாட்டுப்பிள்ளை நீது சந்திரா, யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பொண்ணா என்ற பாடலுக்கு ஆடி பிரபலமானவர். அதையடுத்து ஜெயம்ரவியுடன் ஆதிபகவன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் பல காட்சிகளை தம் அடித்தபடி நடித்தவர், ஜெயம்ரவியுடன் அதிரடி சண்டை காட்சியிலும் நடித்து பரபரப்பு கூட்டியிருக்கிறார். அதையடுத்து, இவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு தகுதியான நடிகை என்றும் சினிமாத்துறையினர் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கேற்ற வளர்ச்சி என்பது நீதுவுக்கு இல்லை. ஆதிபகவன் படத்தின் தோல்வியால், இவர் நடித்த எந்த படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்று ஓரங்கட்டுகிறார்கள் படாதிபதிகள்.

இந்த நிலையிலும், ஆர்யா-ஹன்சிகா-அஞ்சலி நடித்து வரும் சேட்டை படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடுகிறார் நீதுசந்திரா. பார் செட்டப்பில் படமாக்கப்படவிருக்கும் இப்பாடலில் தண்ணி அடித்தபடி மப்புடன் ஆடுகிறாராம் நீது. ஏற்கனவே ஸ்டைலாக தம் அடித்து புகை மண்டலத்தை கிளப்பி விட்ட அவர், இப்படத்தில் புதுமையான முறையில் பாட்டிலை திறந்து சரக்கு அடிக்கிறாராம். அதற்காகவே சில நாட்களாக அம்மணிக்கு பயிற்சி கொடுக்க உள்ளார்களாம். அதோடு, சும்மாவே அவர் சுத்தி சுத்தி ஆடுவார். அதுவும் நம்மளோட மப்பு அடித்து விட்டு வேறு ஆடுகிறார். அதனால் நாமெல்லாம் அலாட்டாக இருக்க வேண்டும் என்று நீதுசந்திராவுடன் இணைந்து ஆட்டம் போடும் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி ஆகியோர் இப்போதே நடன ரிகர்சலை தொடங்கி விட்டார்களாம்.

Comments