சென்னை::விஷ்ணு வர்தன் நடிப்பில் கடந்த 6 மாதங்களாக உருவாகி வரும் அஜீத் படத்துக்கு வலை என்ற தலைப்பு இன்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்த புதிய டிசைன்கள் மற்றும் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன.
அஜீத் - நயன்தாரா, ஆர்யா - டாப்ஸி நடிக்கும் இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார்.
இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் தலைப்பை ரகசியமாக வைத்திருந்தனர். காரணம், பெயரை முதலிலேயே அறிவித்துவிட்டால், ரசிகர்கள் ஆர்வத்தில் அந்தப் பெயரில் பேஸ்புக், இணையதளங்களில் புதிய சைட்கள் தொடங்கிவிடுகிறார்களாம்.
இதைத் தவிர்க்கவே பெயரை வெளியில் சொல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் இன்று படத்தின் போஸ்டர் மற்றும் டிசைன் வெளியாகியுள்ளது. மங்காத்தா ஹேர் ஸ்டைலில், டுகாட்டி பைக்கில் அமர்ந்தபடி அஜீத் போஸ் கொடுக்கும் இந்த போஸ்டரில், வலை என்று படத்தின் தலைப்பு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
அஜீத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்ட யுவன் சங்கர் ராஜா இசமையமைத்துள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டை நடத்தவிருக்கிறார்கள்.
Comments
Post a Comment