Sunday,10th of March 2013
சென்னை::பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. எல்லா மொழியிலும் நடிக்க வ¤ரும்புகிறேன் என்கிறார் ஸ்ருதி. இது பற்றி அவர் கூறியதாவது:
பெண்கள் பாதுகாப்பு பற்றி கேட்கிறார்கள். இரவு 11 மணிக்குகூட ஒரு பெண் ஆட்டோவில் தனியாக ஏறி செல்லக்கூடிய பயமில்லாத இடத்தில் வசிக்கவே நான் விரும்புகிறேன். நான் மட்டுமல்ல, மற்ற பெண்களும் அதுபோலத்தான் நினைப்பார்கள். பெண் சுதந்திரம் பேச்சளவில் இருந்துவிடக் கூடாது. படங்களை பொறுத்தவரை மீண்டும் தெலுங்கில் ‘எவடு என்ற படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிக்கிறேன்.
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்கிறேன். பெரும்பாலான ஹீரோயின்கள் பாலிவுட்டில் கவனம் செலுத்துகிறார்களே என்கின்றனர். என்னை பொறுத்தவரை எல்லா மொழி படங்களுமே ஒன்றுதான். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று வேறுபடுத்தி பார்க்க விரும்பவில்லை. எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன். இப்போதைக்கு இந்தியில் பிரபுதேவா இயக்கும் ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் நடிக்கிறேன். இது தமிழில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும் படத்தின் ரீமேக் என்றார்.
Comments
Post a Comment