Saturday,23rd of March 2013
சென்னை::கேளடி கண்மணி’, ‘நேருக்கு நேர்’, ‘சத்தம் போடாதே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்த். தற்போது ‘மூன்றுபேர் மூன்று காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அர்ஜுன், சேரன், விமல் நடிக்கின்றனர். பானு, சுர்வின் சாவ்லா ஹீரோயின். இப்படத்தில் வசந்த் மகன் ரித்விக் வருண் அறிமுகமாகிறார்.
இதுபற்றி வசந்த் கூறியதாவது: எனக்கு ஆதித்யா, ரித்விக் வருண் என 2 மகன்கள்.
நடிக்க வேண்டும் என்று ரித்விக் ஆசைப்பட்டான். அதற்காக நடனம், சண்டை பயிற்சி பெற்றான். அவனது ஆசைப்படி நடிகன் ஆகிவிட்டான். ‘கடுமையாக உழைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்’ என்று என் குரு இயக்குனர் கே.பாலசந்தர் அவனை வாழ்த்தினார். அதை பெருமையாக கருதுகிறேன். ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் ‘ஜஸ்ட் ஸ்டாப் தி பாட்டு’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் ரித்விக். விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
Comments
Post a Comment