சித்தார்த் - சமந்தா நடிக்கும் தமிழ்ப் படத்திற்கு நீதிமன்றம் தடை!!!

Friday,22nd of March 2013
சென்னை::சித்தார்த் - சமந்த ஜோடியாக நடித்த தெலுங்குப் படம் 'ஜாபர்தஸ்த்'. கடந்த மாதம் ஆந்திராவில் வெளியான இப்படம், தற்போது தமிழில் 'டும் டும் பீ பீ' என்ற தலைப்பில் டப்பிங் செய்யப்படுகின்றது.

இதற்கிடையில் ஜாபர்தஸ்த் படத்தை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த யாஷ்ராஜ் பிலிம் என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பேண்ட் பாஜாபரத்’ என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குநர் நந்தினி ரெட்டி தெலுங்கில் ‘ஜாபர்தஸ்த்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை தமிழிலும் ‘டும் டும் பீ பீ’ என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர். எனவே இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு ‘ஜாபர்தஸ்த்’ படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடகூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

டும் டும் பீ பீ' படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

Comments