பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா!!!

Wednesday,27th of March 2013
சென்னை::பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் உருவாகும் படம் பவித்ரா. ஜனார்த்தன் மஹார்ஷி இயக்குகிறார். இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் பவித்ரா என்ற கேரக்டரில் பாலியல் தொழிலாளியாக ஸ்ரேயா நடிக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை 5 நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்பட 5 இடங்களில் நடக்கிறது. ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் இந்த விழா நடைபெறுகிறது. விமானம் மூலம் 5 ஊர்களுக்கும் செல்லும் ஸ்ரேயா, அங்கு நடக்கும் விழாவில் படக்குழுவுடன் பங்கேற்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், தமிழ், கன்னடத்தில் சந்திராபடத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் பவித்ரா. இந்த இரண்டு படங்களுமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கொண்டவை. அடுத்தடுத்து இதுபோன்ற படங்கள் கிடைப்பது எனது அதிர்ஷ்டம். தீபா மேத்தாவின் இயக்கத்தில் மிட்நைட்ஸ் சில்ரன் படத்தில் நடித்தேன். இதுவே எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளி வேடம், மிகவும் சவாலாக அமைந்தது. இப்படத்துக்காக எனக்கு விருது கிடைக்கும் என்கிறார்கள். ரசிகர்கள் படம் பார்த்து பாராட்டினாலே போதும் என்றார்.

Comments