குழந்தை, குடும்பம் உள்ளது வித்யாபாலன் போல் கவர்ச்சி காட்ட முடியாது : கஜோல் காட்டம்!!!

Saturday,16th of March 2013
மும்பை::எனக்கு குடும்பம் உள்ளது. வித்யாபாலன்போல் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்றார் கஜோல். தமிழில் ‘மின்சார கனவு‘ படத்தில் பிரபு தேவா ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கஜோல். இந்தியில் 11 வருடங்கள் ஓடிய ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். வித்யாபாலன் போல் என்னால் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது,‘பாலிவுட்டில் ஷாருக்கானும், நானும் பொருத்தமான ஜோடியாக அமைந்தோம். அதன்பிறகு இன்றுவரை எங்களைப்போல் ஒரு ஜோடி அமையவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன்.

மீண்டும் நடிக்க வருவது எப்போது என்கிறார்கள். எனக்கு குழந்தைகள் இருக்கிறது. அவர்களை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே இப்போது படங்களை ஏற்க முடியாது. டி.வியில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அதற்கான எந்த வாய்ப்பையும் இதுவரை ஏற்கவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் என் மனதை கவரும் சப்ஜெக்டாக அது இருக்க வேண்டும். டர்ட்டி பிக்சர் (வித்யாபாலன் நடித்த படம்) போன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு குடும்பம், குழந்தை, கணவர் இருக்கிறார். ஒரு சில அம்சங்கள் எனக்கு பொருந்தாதவையாக உள்ளன. எனவே அவற்றை ஏற்கமாட்டேன். ‘டர்ட்டி பிக்சர் போன்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் என்னால் நடிக்க முடியாது என்றார் கஜோல்.

Comments