Saturday,23rd of March 2013
சென்னை::கால்ஷீட் கேட்ட கன்னட ஹீரோவுக்கு நோ சொல்லி இருக்கிறார் ஸ்ருதி. கோலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய படவுலகம் எப்போதுமே வடநாட்டு ஹீரோயின்களைத்தான் தேடி அழைத்து வருகிறது. கன்னட படவுலகம் இதில் முன்னிலை வகிக்கிறது. கன்னடத்தில் தற்போது நடித்து வரும் பெரும்பாலான ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிரபலமாக இருப்பவர்கள். ஒவ்வொரு முறையும் சான்டல்வுட்டில் பெரிய ஹீரோக்கள் படங்கள் அறிவிக்கும்போது இதுபோன்ற பெரிய ஹீரோயின்கள் பெயரும் சேர்ந்தே அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கன்னட ஹீரோ புனித் ராஜ்குமார் பிறந்த தினம் சமீபத்தில் நடந்தது.
அதில் அவரது புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியானது. பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஜெயந்த் சி.பரன்ஜி இயக்குகிறார். இதில் புனித் ஜோடியாக நடிக்க ஸ்ருதியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் ஸ்ருதி தரப்பில் ‘நோ‘ என்ற பதில்தான் வருகிறதாம். சமீபத்தில் பட குழு சார்பில் ஸ்ருதியை தொடர்பு கொண்டு கால்ஷீட் கேட்டபோது வரும் ஆகஸ்ட் மாதம் வரை அவரிடம் கால்ஷீட் இல்லை என்று பதில் வந்ததாம். பட குழுவினர் மே மாதமே நீண்ட நாட்களுக்கு வெளிப்புற படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருப்பதால் இப்போது பாலிவுட்டிலிருந்து பரிணிதி சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Comments
Post a Comment