Saturday,2nd of March 2013
சென்னை::கொடுக்கிற கடவுள் கூரைய பிச்சுக்கிட்டு கொடுப்பார்னு சொல்வாங்க. இப்போ கடவுள் கொடுத்துக்கிட்டு இருக்கிறது பவர் ஸ்டாருக்கு. கண்ணா லட்டு தின்ன ஆசையான்னு எல்லாரையும் பார்த்த கேட்டுபுட்டு டன் கணக்குல லட்டு திங்குறது பவர் ஸ்டார்தான். நிறைய படங்கள்ல குத்துப்பாட்டு, மூன்று படங்கள் காமெடின்னு மனுஷன் காட்டுல இப்போ லட்டு மழை இல்லீங்க துட்டு மழை. தான் தயாரித்த, இயக்கிய, நடித்த படங்களை அப்படியே தூக்கி பரன்ல போட்டுவிட்டு ராத்திரி பகலா நடிச்சிக்கிட்டிருக்காரு. ஒரு நாளைக்கு மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு ரிச் கேர்ளோடு ஆட்டம் போடுகிறார்.
இதன் உச்சகட்டமாக ஒரு கட்டிட கம்பெனி விளம்பரத்துல நமீதாவுக்கு ஜோடியாக நடிச்சிருக்காரு. பல கட்டிட வேலைகள்ல தில்லுமுல்லு பண்ணினதா பவர்மேல ஏகப்பட்ட வழக்கு இருந்தாலும் நாம் கட்டிடம் கட்ட இந்த விளம்பரத்துல ஆலோசனை சொல்றார். காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டிருக்கிறார் மனுஷன்.
Comments
Post a Comment