Saturday,23rd of March 2013
சென்னை::சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தால் ஹீரோயின்களுக்கு மைனஸா என்பதற்கு பதில் அளித்தார் தமன்னா. பெரும்பாலும் ஹீரோயின் முக்கியத்துவமுள்ள படங்களை யாராவது தயாரிப்பதாக தெரிந்தால் வலியச் சென்று கால்ஷீட் தர முயல்வது, அல்லது தங்களை தேடி வரும்போது ஏற்றுக்கொள்வது என ஹீரோயின்கள் போட்டியில் இருக்கின்றனர். ஆனால் தமன்னா மாறுபட்டிருக்கிறார். அவர் கூறும்போது, ‘இந்தியில் தயாராகும் ‘ஹிம்மத்வாலா நான் விரும்பி நடிக்கும் கதாபாத்திரங்களில் ஒன்று. இது பக்கா பாலிவுட் மசாலா படம். ஹீரோ, ஹீரோயின் இருவருமே ஒரு கருவியாக பயன்படுகிறார்கள். ஹீரோயின்களுக்கு மசாலா படங்களில் நடிப்பது சவாலான விஷயம். குறிப்பிட்ட அளவில்தான் கதாபாத்திரம் இருக்கும்.
அந்த குறுகிய நேரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் பெற வேண்டும். இதேபடத்தில் பெரிய ஹீரோ நடிக்கும்போது பொறுப்பு முழுவதும் ஹீரோ தலையில்தான் இருக்கும். ஹீரோயின்களுக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் பெரிய நடிகருடன் நடிப்பது பெரிய பிளஸ்தான். ஹீரோயின்கள் படங்களை தேர்வு செய்யும்போது எந்த மாதிரியான படத்தில் நடித்தால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும். ஹிம்மத்வாலா முதல் நாள் ஷூட்டிங்கில் 5 உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து வந்து என்னை காதலிப்பதாக கூறினார்கள். அதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். பிறகுதான் இது இயக்குனர் செய்த காமெடி வேலை என்று தெரிந்தது என்றார்.
Comments
Post a Comment