Sunday,17th of March 2013
சென்னை::'கடல்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்திக்கின் மகன் கெளதமை ஹீரோவாக வைத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் படம் ஒன்றை இயக்கப் போகிறார்.
ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் 3. தனுஷ் நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல், அந்தப் படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டியைக் கொடுத்துவிட்டது. ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை. அதே நேரம், ஐஸ்வர்யாவுக்கு இயக்குநர் என்ற அங்கீகாரத்தையும் தரத் தவறவில்லை. அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாவுக்கு சிறப்பு விருது தரப்பட்டது. தனது அடுத்த படம் குறித்து எதையும் அறிவிக்காமலிருந்த ஐஸ்வர்யா, சில கதைகளுக்கு திரைக்கதை எழுதி வைத்திருந்தார். இந்த நிலையில் கார்த்திக் மகன் கெளதம் கார்த்தியை வைத்து அடுத்த படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
சமீபத்தில் கெளதமை அழைத்து இதுகுறித்து ஐஸ்வர்யா பேசியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான ஹீரோயின் தேடுதலில் தற்போது ஐஸ்வர்யா ஈடுபட்டுள்ளாராம்.
Comments
Post a Comment