Tuesday,5th of March 2013
சென்னை::தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்கள் பாலுமகேந்திராவும், மகேந்திரனும். துருவ நட்சத்திரங்களுக்கு உள்ள சிறப்பு, அவை எப்போதும் இடம்மாறுவதில்லை, மறைவதில்லை.
பாலுமகேந்திரா தனது தள்ளாத வயதிலும் (அப்படிச் சொன்னா அவருக்கு கோபம் வரும்) ஒரு படத்தை குறைந்த முதலீட்டில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தை தயாரிப்பவர் சசிகுமார்.
மகேந்திரனும் சாசனம் படத்தோடு படம் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தவறு... இந்த கமர்ஷியல் சினிமா உலகம் அவரை நிறுத்திவிட்டது. தற்போது பழைய உற்சாகத்துடன் புது புராஜெக்ட் ஒன்றை அவர் தொடங்கயிருக்கிறார். பிற விவரங்கள் விரைவில் அவராலேயே தெரிவிக்கப்படும்.
இந்த இரு இயக்குனர்களின் படங்களுக்கும் தாலாட்டு சேர்த்தவர் இளையராஜா. என் படத்துக்கு எப்போதும் இளையராஜாதான் என்று பாலுமகேந்திரா உறுதி செய்திருக்கிறார். மகேந்திரன்..?
கூட்டணியில் மாற்றம் வரலாம் என்கிறார்கள்
Comments
Post a Comment