Saturday,2nd of March 2013
சென்னை::ஜெயம் கொண்டான்’, ‘வ குவார்ட்டர் கட்டிங்’ படங்களில் நடித்த லேகா வாஷிங்டனை மறக்க முடியாது. பாலிவுட்டில் பிகினியில் கலக்கும் இவர், மும்பையில் குடியேறியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘கல்யாண சமையல் சாதம்’ செய்ய வந்துள்ள அவரிடம் பேசினோம். ‘‘தமிழில் ‘ஜெயம் கொண்டான்’ முதல் படம். வினய்க்கு தங்கையா நடிச்சேன். அப்ப எல்லாரும் பயமுறுத்தினாங்க. முதல் படத்துல சிஸ்டர் ரோல் பண்ணா, அடுத்தடுத்து அதே மாதிரி ரோல் வரும்னு சொன்னாங்க. அதுக்காக கவலைப்படல. கதையும், கேரக்டரும் என்ன கேட்கு தோ அதை பண்ணணும். யாருக்காகவும் பயப்படக் கூடாதுன்னு துணிச்சலா நடிச்சேன். அதுக்கு பிறகு ‘வ’ படத்துல ஹீரோயினா பண்ணேன். இப்ப தெலுங்கு, இந்தி, கன்னடம்னு பிஸி. அதனாலதான் கோலிவுட்டுக்கு திரும்ப வர ரொம்ப லேட்டாயிடுச்சி...’’ என்றவர், ‘‘தெலுங்கில் ‘வேதம்’, ‘காமினா’, கன்னடத்தில் ‘ஹூடுகா ஹூடுகி’ படங்கள் பண்ணேன். இந்தியில் ‘பீட்டர் கயா காம் சே’, ‘பவர்’ உட்பட சில படங்கள் பண்றேன். தமிழ்ல பிரசன்னா ஜோடியா ‘கல்யாண சமையல் சாதம்’ பண்ணிகிட்டிருக்கேன். நல்ல சப்ஜெக்ட். இந்த கேரக்டரை தவறவிடக் கூடாதுன்னு கெட்டியா பிடிச்சுகிட்டேன். செகண்ட் இன்னிங்சுக்கு இந்தப் படம் கண்டிப்பா கை கொடுக்கும்...’’ என்று சொல்பவர், மும்பையில் ‘அஜி’ என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். ‘‘சினிமாவை தவிர மற்ற துறையிலும் ஈடுபாடு உண்டு. புதுசு புதுசா புராடக்ட் டிசைன் பண்ணி கொடுக்கிற ‘அஜி’ என்ற கம்பெனியை நடத்திகிட்டிருக்கேன். எனக்கு உதவியா சில ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. இதுல பிஸியா இருந்தது கூட, தமிழில் இடைவெளி ஏற்பட காரணம்.
இங்க எதிர்பார்த்த மாதிரி நல்ல டீம் கிடைக்கலை. அதை மீறி வந்த சில கதைகளும் எனக்கு பொருத்தமா இல்லை. அதனால சில கதைகளை நிராகரிச்சேன். அப்புறம் பாலிவுட் வாய்ப்பு வந்தது. உஷாரா ஒப்புக்கிட்டேன். நான் மத்தவங்க மாதிரி ரெகுலர் ஹீரோயின் கிடையாது. எல்லா படத்திலும் நானே நடிக்கணும்னு ஆசைப்படற ரகமும் கிடையாது. சென்னையிலயே இருக்கணும், நான் ஸ்டாப்பா படங்கள்ல நடிக்கணும்னு, இப்ப மட்டுமில்ல, எப்பவுமே நினைக்க மாட்டேன். எனக்கு என்ன கிடைக்கணும்னு எழுதப்பட்டிருக்கோ, அதுதான் நடக்கும். இந்த விஷயத்துல தெளிவா இருக்கேன்...’’ என்ற லேகா, சிம்புவுடன் இணைந்து ஆல்பம் உருவாக்குவதாக வந்த தகவலை மறுத்தார். ‘‘சிம்பு கூட ‘கெட்டவன்’ படத்துக்காக சில நாட்கள் நடிச்சேன். அந்தப் படம் டிராப் ஆனது. நான் வேற படத்துக்கு போயிட்டேன். ஆனா, திடீர்னு ஒரு நியூஸ். நானும், சிம்புவும் சேர்ந்து ஆல்பம் பண்ணப் போறோம்னு. அதுபற்றி யாரும் என்கிட்ட கேட்கவே இல்ல. அப்படிலாம் எந்த ஐடியாவும் எங்கிட்ட இல்லை...’’ என்ற லேகாவுக்கு பிகினி டிரெஸ் பற்றி கேட்டால் கோபம் வருகிறது.
‘‘பாலிவுட் படங்களை பற்றி எல்லாருக்கும் தெரியும். ஒரு படத்துல நடிக்க ஓகே சொல்றப்ப, கதை என்ன? கேரக்டர் என்ன? அதுல எப்படி வரணும்னு டைரக்டர்கிட்ட கேட்பேன். என் உடல்வாகுக்கு கம்பர்ட்டபிளா இருந்தா, பிகினி டிரெஸ் போட்டுகிட்டு நடிப்பேன். இதுல என்ன தப்பு? அப்படித்தான் இந்திப் படத்துல பிகினி டிரெஸ்சில் வந்தேன். அதைப்பற்றி ஏன் இவ்வளவு பரபரப்பா பேசறாங்கன்னு புரியல...’’ என்ற லேகா, குறிப்பிட்ட காலம்வரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவாராம். ‘‘படம் தயாரிக்கணும், டைரக்ஷன் பண்ணணும்... இப்படி நிறைய ஆசையை பூட்டி வெச்சிருந்தாலும், இப்ப என் கவனம் நடிப்பில் மட்டுமே. பல மொழி படங்கள்ல நல்ல கேரக்டர்கள் பண்ணணும். இதுவரை பண்ணது போதும், திருப்தி ஏற்பட்டிருக்குங்கற மனநிறைவு வந்த பிறகு டெக்னிக்கல் சைடில் கவனம் செலுத்துவேன்...’’ என்று திட்டவட்டமாகச் சொல்லி முடித்தார்.
Comments
Post a Comment