Sunday,3rd of March 2013
சென்னை::நடிகைகள் ஸ்ரேயாவும், ரிச்சாவும் திருப்பதி கோவிலில் ஒரே நாளில் சாமி கும்பிட்டனர்.
ஸ்ரேயா அதிகாலையில் நடக்கும் சுப்ரபாத சேவையில் பங்கேற்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். உண்டியலில் காணிக்கையும் செலுத்தினார்.
ஸ்ரேயா வந்துள்ள தகவல் பரவியதும் ரசிகர்கள் திரண்டனர். ஸ்ரேயாவை முற்றுகையிட்டு ஆட்டோகிராப்பும் கேட்டனர். ஆனால் ஸ்ரேயா இங்கு சாமி கும்பிட வந்துள்ளேன் என்று கூறிவிட்டு வேமாக காருக்குள் சென்று விட்டார். அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி வெங்கடா ஜலபதி எனக்கு பிடித்தமான கடவுள். வருடத்துக்கு நான்கு தடவை இந்த கோவிலுக்கு வந்து வழிபடுகிறேன்.
என் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் திருப்பதிக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளேன்.
தமிழ், கன்னட மொழிகளில் தயாரான சந்திரா படத்தில் நடித்துள்ளேன். இது விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதற்காகவே சாமி கும்பிட வந்தேன். இந்த இடத்தில் மன அமைதியை மட்டுமே எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் நடிகை ரிச்சாகங்கா பத்யாவை காணவும் ரசிகர்கள் திரண்டார்கள். அவர் வேகமாக கோவிலுக்குள் சென்று விட்டார். திரும்பி வந்தபோது ரிச்சாவை சுற்றி ரசிகர்கள் முற்றுகையிட்டனர். பாதுகாவலர்கள் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி ரிச்சாவை காரில் அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment