கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday,16th of March 2013
சென்னை::டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த பாலிவுட் ஹீரோயின் வித்யாபாலன், மெல்பர்னில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவின் தூதராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தனது படத்தின் ஷூட்டிங்கை மெல்பர்னில் நடத்த ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார் வித்யா.

திருமண முறிவுக்கு பிறகு நடிக்க வந்த காவ்யா மாதவன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘என்டே அம்மா’ என்ற மலையாள படத்தில் 20 வயது மகனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஜோ வி, ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார்.

ஜீவா, த்ரிஷா நடிக்கும் ‘என்றென்றும் புன்னகை’ படத்துக்காக செஷல்ஸ் தீவில் கலாட்டா நிறைந்த கடற்கரை பாடல் காட்சியை படமாக்குகிறார் இயக்குனர் அஹமத். இதில் வினய், ஆண்ட்ரியா நடிக்க உள்ளனர்.

பிருத்விராஜ் நடிக்கும் ‘மும்பை போலீஸ்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் மேக்னா ராஜ். ‘திரையுலகில் அழகான ஹீரோக்களில் ஒருவரான பிருத்விராஜுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்கிறார் மேக்னா.

மும்பையில் விஜய் நடிக்கும் ‘தலைவா‘ ஷூட்டிங் முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பட குழு வரும் 20ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஹிட் படம் கொடுத்தவர் டைரக்டர் டி.ராஜேந்தர். அடுத்து இவர் தெலுங்கில் ‘பிரேமதாஸு என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார். இதில் முக்கிய வேடமொன்றிலும் நடிக்க உள்ளார். இம்மாதம் 18ம் தேதி முதல் ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது. ஹீரோயின் நிஹாரிகா.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது குழந்தையை கவனிப்பதற்காக நடிப்பு உள்ளிட்ட வேலைகளுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்.

15 வருடத்துக்கு பிறகு ஸ்ரீதேவி நடித்த ‘இங்லிஷ் விங்லிஷ்‘ படம் சீனாவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படத்தை கவுரி ஷிண்டே இயக்கினார்.

‘பீட்சா படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் சமீபத்தில் வேளச்சேரியில் உள்ள ஷாப்பிங் மாலில் பொருட்கள் வாங்க சென்றார். அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டனர். கூட்டம் அதிகமானதால் பொருட்கள் எதுவும் வாங்காமல் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

ஆதி பகவன்‘ படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார் நீது சந்திரா. புதுடெல்லியில் சமீபத்தில் நடந்த பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் போட்டியில் கலந்துகொண்டு வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி உற்சாகப்படுத்தினார்.

2 வருடமாக நடிக்காமல் இருந்த வடிவேலு வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். சிம்புதேவன் இயக்கும் ‘புலிகேசி 2‘ம் பாகம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ‘ஆப்ரிக்காவில் வடிவேலு‘, யுவராஜ் இயக்கும் ‘தெனாலிராமன்‘ மற்றும் 25 வேடங்களில் நடிக்கும் 3டி படமான ‘உலகம்‘ ஆகியவற்றில் நடிக்க உள்ளார்.

தனுஷ் நடிக்க பரத்பாலா இயக்கியுள்ள ‘மரியான்‘ படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை. இதுபோல் தனுஷ் நடிக்கும் ‘ராஞ்சா‘வும் ஜூன் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆகிறது.

வெண்ணிலா கபடி குழு இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் நடித்த அதே வேடத்தில் சரண்யா மோகன் இந்தியிலும் நடிக்க உள்ளார்.

Comments