ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் : இயக்குனர் பாசில் மகன் பகிரங்க அறிவிப்பு!!!

Friday,15th of March 2013
சென்னை::ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன் என்று இயக்குனர் பாசிலின் மகனும் நடிகருமான பஹாத் அறிவித்துள்ளார். ‘பச்சைக்கிளி முத்துச்சரம், ‘ஆயிரத்தில் ஒருவன், ‘விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. இவர் ‘அன்னெயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் நடித்தார். இதில் பஹாத் பாசில் ஹீரோ. இவர் பிரபல இயக்குனர் பாசிலின் மகன். பஹாத் ஒரு பேட்டியில், ‘ஆண்ட்ரியாவை காதலிக்கிறேன்‘ என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி மலையாள இதழ் ஒன்றுக்கு பஹாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அன்னெயும் ரசூலும் பட ஷூட்டிங்கின்போது ஆண்ட்ரியாவுடன் அதிகம் பேசியதுகூட கிடையாது. சென்னையில் இப்படத்தின் எடிட்டிங் செய்யப்பட்ட படத்தை பார்க்க வந்தபோது ஆண்ட்ரியா மீது எனக்கு காதல் இருப்பதை உணர்ந்தேன். ஆண்ட்ரியாவின் பாட்டு திறமையும், நகைச்சுவையாக பேசும் உணர்வும், புத்திசாலித்தனமும் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்றார். பஹாத்தை ஆண்ட்ரியாவும் காதலிக்கிறாரா என்பது உறுதியாகவில்லை. இது பற்றி கருத்து கேட்க முயன்றபோது, ஆண்ட்ரியாவை தொடர்புகொள்ள முடியவில்லை. ஏற்கனவே இயக்குனர் செல்வராகவன், அதன் பின் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோரை ஆண்ட்ரியா காதலித்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Comments