Friday,1st of March 2013
சென்னை::இளவரசியாக நடிக்க பல ஹீரோயின்கள் பொருந்தவில்லை என்றார் பெண் இயக்குனர். கடைசி இளவரசன், இளவரசி கதையாக உருவாகிறது ‘சந்தரா’. பிரேம் ஹீரோ. ஸ்ரேயா ஹீரோயின். பெண் இயக்குனர் ரூபா ஐயர் டைரக்ஷன். இப்படத்தின் பாடல் சிடி சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது ரூபா கூறும்போது,‘தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. கடைசி இளவரசன், இளவரசி காதல் கதையாக ‘சந்தரா’ ஸ்கிரிப்ட் தயாரானது. இதில் இளவரசி வேடத்தில் நடிக்க பல்வேறு ஹீரோயின்களை சந்தித்தேன். ஆனால் பலர் பொருத்தமாக அமையவில்லை.
இறுதியில் ஸ்ரேயாவை பார்த்தபோது அவரது உடல மைப்பு, தோற்றம் இளவரசியாக நடிக்க பொருத்தமாக இருந்தார். அவரை தவிர வேறு யாரையும் இந்த வேடத்துக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கதையை சொன்னபோது உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக பிரத்யேக நடன பயிற்சி, களரி சண்டை பயிற்சி பெற்றார். ஹீரோ பிரேம். ஸ்ரேயாவின் அண்ணன் வேடத்தில் விவேக் நடிக்கிறார். தமிழ் தவிர கன்னடத்திலும் இப்படம் உருவாகிறது. இதற்காக கன்னட மொழியை கற்று சொந்த குரலில் டப்பிங் பேசினார் விவேக். கவுதம் ஸ்ரீவத்ஸா இசை. ரவி ராஜகோபால் தயாரிப்பு’ என்றார். முன்னதாக விழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பாடல் சிடி வெளியிட்டனர்.
Comments
Post a Comment