‌ஜில்லா எனது செல்லப் பெயர் - விஜய் பேட்டி!!!

Wednesday,13th of March 2013
சென்னை::நேற்று ‌ஜில்லா படத்தின் பூஜை சூப்பர்குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. படத்தை குறித்த செய்திகளை ஆர்.பி.சௌத்‌ரி முறைப்படி அறிவித்தார். பிறகு பத்தி‌ரிகையாளர்களுக்கு படம் குறித்து பேட்டியளித்தார் விஜய்.

சினிமாவில் என்னை உருவாக்கிய முக்கியமான நிறுவனம் சூப்பர்குட் ஃபிலிம்ஸ். பூவே உனக்காக, லவ் டுடே, ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி என்று அவர்கள் பேன‌ரில் நான் நடித்த எல்லாப் படங்களுமே சூப்பர்ஹிட். எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மோகன்லாலுடன் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

வேலாயுதம் படத்தின் போதே அதில் அசோசியேட்டாக இருந்த நேசன் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். கதை பவர்ஃபுல்லாக இருந்தது. சேர்ந்து பணியாற்றுவோம் என்று அப்போதே சொல்லியிருந்தேன். சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மூலம் அது இப்போது நிறைவேறியிருக்கிறது.

‌ஜில்லா என்பது ஒரு பகுதியை குறிக்கும் சொல்லாக இருந்தாலும் இதில் எனது நண்பர்கள் என்னை செல்லமாக கூப்பிடும் பெயராக வருகிறது. மதுரை பேக்ராப்பில் உருவாகும் படம். ஆக்சன், சென்டிமெண்ட் எல்லாம் நிறைந்த கதை. எனக்கு இது இன்னொரு கில்லியாக அமையும் என்று நம்புகிறேன்.

நேசன் முருகா என்ற படத்தை ஏற்கனவே இயக்கியிருக்கிறார் என்பது முக்கியமானது.

Comments