Wednesday,6th of March 2013
சென்னை::சிங்கம் 2 வுக்குப் பிறகு சூர்யா யாருடைய இயக்கத்தில் நடிப்பார்? லிங்குசாமியா இல்லை கௌதமா?
பல வாரங்கள் நீடித்த இழுபறி இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. லிங்குசாமிக்குதான் முதல் கால்ஷீட் என்று முடிவு செய்திருக்கிறாராம் சூர்யா. கௌதம் தனது ஸ்கிரிப்டை இன்னும் முடிக்காததால் சூர்யா அவரை கை கழுவியதாகவும், சூர்யாவிடம் சொன்ன கதையை அஜித், விஜய்யிடமும் கௌதம் கூறினார் அதனால்தான் சூர்யா இப்படியொரு முடிவை எடுத்தார் எனவும் இருவேறு கருத்துகள் உலவுகின்றன.
எது எப்படியிருப்பினும் இப்போதைக்கு முன்னணி நடிகர்களின் கால்ஷீட் தமிழில் இல்லை என்பதால் தனது கவனத்தை கன்னட சினிமா பக்கம் கௌதம் திருப்பியிருப்பதாக தகவல். புனித் ராஜ் குமாரிடம் கௌதம் கதை கூறியிருக்கிறார். கதை அவருக்கு ஓகே. இந்த மாதமே படப்பிடிப்பை தொடங்குகிறார்கள் என பெங்களூருவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கௌதமின் அடுத்த மூவ் தமிழா, தெலுங்கா இல்லை இப்போது கிசுகிசுப்பதைப் போல் கன்னடமா?
இன்னும் சில நாட்களில் உறுதிபட தெரிந்துவிடும்.
Comments
Post a Comment