Sunday,10th of March 2013
சென்னை::தமிழ் சினிமாவையும் பாட்டையும் பிரிக்க முடியாததைப்போலவே. செல்வராகவனையும், தனுசையும் பிரிக்கவே முடியாது. கடைசியாக அண்ணன் இயக்கதில் தம்பி தனுஷ் நடித்த "மயக்கம் என்ன" படம் சரியாக போகவில்லை. இதனால் தம்பி தனுஷ் 3 படத்தில் நடித்தார். அதுவும் சரியாக போகவில்லை. தற்போது "மரியான்" என்ற படத்தில் நடித்து வருகிறார். "எதிர்நீச்சல்" என்ற படத்தை தயாரித்து வருகிறார். அண்ணன் "இரண்டாது உலகம்" படத்தை இயக்கி வருகிறார். இப்படி ஆளுக்கொரு திசையில் பயணம் செய்யும் தனுசும், செல்வராகவனும் மீண்டும் இணைகிறார்கள். இதனை இருவருமே தங்கள் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஜெயம்ரவியும், ராஜாவும் மீண்டும் இணையப்போவதாக அறிவித்து விட்டார்கள்
Comments
Post a Comment