Friday,1st of March 2013
சென்னை::கலகலப்பு படத்தில், ஓவியாவுக்கு போட்டியாக கவர்ச்சியில் வலம் வந்தது போன்று, தற்போது நடித்துள்ள, மதகஜ ராஜாவிலும், வரலட்சுமியுடன் போட்டி போட்டுள்ளீர்களா என்று அஞ்சலியை கேட்டால், "இந்த படத்திலும் போட்டி தான். ஆனால், கவர்ச்சி போட்டிஅல்ல; நடிப்பு போட்டி. இந்த படத்தின் கதைக்களம் அந்த மாதிரி. கதையை பொறுத்து தான் கவர்ச்சியும், நடிப்பும் அமையும் என்கிறார், அஞ்சலி. "மதகஜ ராஜாவில் எனக்கு குடும்ப பாங்கான கேரக்டர். மீண்டும், "அங்காடிதெரு அஞ்சலியை நினைவுபடுத்தும் அளவுக்கு, நடிப்புக்கு தீனி போடும் கேரக்டராகவும் உள்ளது. மேலும், இப்படத்தில், விஷாலுடன் நடித்தது நல்ல அனுபவம். எனக்கும், அவருக்கும் இடையே கெமிஸ்டரி நன்றாக "ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்கிறார் அஞ்சலி.
Comments
Post a Comment