Thursday,28th of March 2013
சென்னை::ஒருவழியாக வடிவேலுவின் வனவாசம் முடிவுக்கு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் பல கதைகளை கேட்ட வடிவேலு யுவராஜ் என்பவரின் "கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற கதையை டிக் அடித்து விட்டார். "இம்சை அரசன் 23ம் புலிகேசி" பாணியிலான வரலாற்று காமெடி படம். இதனை 30 கோடி செலவில் தயாரிக்க முன்வந்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரு வேடங்களில் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார்.
இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இதனுடன் சேர்த்து இந்த ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் 6 படங்களை தயாரிக்கிறது என்றும் அர்ச்சனா கூறியிருக்கிறார்.
இதே பாணியில் "சரஸ்வதி சபதம்" என்ற படத்தையும் தயாரிக்கிறது. இதில் ஜெய், விடிவி கணேஷ், சத்யன், மனோபாலா நடிக்கிறார்கள் மற்ற நடிகர்கள், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சந்துரு என்ற புதுமுகம் இயக்குகிறார். ஜெயம் ரவியும் ஜெயம் ராஜாவும் இணையும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார்கள். அதர்வா நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கபோவதாக அறிவித்திருக்கிறார்கள். இதுதவிர ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார்கள்.
Comments
Post a Comment