சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு” படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு: 300 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்!!!

Friday,8th of March 2013
சென்னை::நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் 'ஒன்பதுல குரு'. இதில் நாயகனாக வினய், நாயகியாக லட்சுமிராய் நடித்துள்ளனர். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஷாம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

செல்லத்துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். “கே” இசையமைத்துள்ளார். காமெடி கதையாக தயாராகியுள்ளது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதால் பெரிய நடிகர்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.

“ஒன்பதுல குரு” படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள “வா மச்சி வா மச்சி வீட்டை விட்டு” பாடல் ஹிட்டாகியுள்ளது. இன்டெர் நெட்டில் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். பவர் ஸ்டார் சீனி வாசனும் இதில் “அலையாத சும்மா சும்மா” பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் திரையுலக முக்கியஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டன. இதை பார்த்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிறந்த காமெடி படமாக வந்துள்ளது என்று இயக்குனர் பி.டி.செல்வ குமாரை பாராட்டினார்.

அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் வீட்டில் இருபது வருடமாக பி.டி. செல்வகுமார் பணியாற்றுகிறார். அவர் இயக்கியுள்ள “ஒன்பதுல குரு” படம் ஜாலியான காமெடி படமாக வந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த படமாக உருவாக்கி உள்ளார். விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ஜீவா பேசும் போது, இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி “ஒன்பதுல குரு” படத்தை எடுத்துள்ளனர். கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். சில காட்சிகளை பார்த்து மிகவும் ரசித்தேன் என்றார்.

இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது:-

“ஒன்பதுல குரு” படத்தின் கதை எனக்கு தெரியும். பிரேம்ஜி அடிக்கடி இந்த படத்தை பற்றி என்னிடம் கூறுவது உண்டு. இன்றைய இளைஞர்கள் காமெடி படங்களை அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த படம் வந்துள்ளது. இளைஞர்களின் ஜாலி கலாட்டாக்கள், திருமணமாகி சந்திக்கும் பிரச்சினைகள் இதில் அலசப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இசையமைப்பாளர் 'கே' கூறும்போது, “வா மச்சி வா” பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது. நிறைய பாராட்டுகள் குவிகிறது. பெண்களுக்கும் இப்பாட்டு பிடித்துள்ளது என்றார். “ஒன்பதுலகுரு” படத்தை காஸ்மா அன்ட்பாஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Comments