இலங்கைத் தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஆதரவு தெரிவித்து ஏப்.2-இல் தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதம்!
Sunday, March 31, 2013
சென்னை::இலங்கைத் (புலிகளுக்கு) தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல் 2ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் அறிவித்துள்ளது.
இது குறித்து சரத்குமார், ராதாரவி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலையில் இலங்கையில் இனப்போரினால் பாதிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளான நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான நல்வாழ்விற்காக 02.04.2013 அன்று செவ்வாய் கிழமை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு, திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அதில் இணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், பி.ஆர்.ஓ.க்கள் சங்கம் ஆகிய அனைத்து சங்கங்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment