Wednesday,27th of March 2013
சென்னை::கஜினி பார்ட் 2வில் சூர்யா நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்தார். ‘சுள்ளான்‘, ‘கஜினி‘ போன்ற படங்களை தயாரித்தவர் சந்திரசேகரன். தற்போது ‘கில்லாடி‘ என்ற படத்தை தயாரித்துள்ளா
ர். ஏ.வெங்கடேஷ் டைரக்ஷன். பரத், நிலா ஜோடி. ஸ்ரீகாந்த் தேவா இசை. இப்படத்தின் டிரைலர், பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கேயார்,‘கில்லாடி படத்தை தயாரிக்கும் சேலம் சந்திரசேகரன் சூர்யா நடித்த கஜினி படத்தை தயாரித்தவர். சூர்யாவுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைந்தது. முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா இருக்கிறார்.
ஆனால் தயாரிப்பாளர் சந்திரசேகரன் தற்போது சிரமத்தில் இருப்பதாக அறிகிறேன். கில்லாடி படத்தை அவர் தயாரித்திருந்தாலும் அதற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். இந்த நேரத்தில் இவருக்கு சூர்யா உதவி செய்தால் அது பெரிய உதவியாக இருக்கும். கஜினி பார்ட் 2 படம் தயாரிக்க அவருக்கு கால்ஷீட் தந்து நடித்துக் கொடுக்க வேண்டும். அதற்கு இங்கு வந்திருக்கும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா உதவியாக இருக்க வேண்டும்‘ என்றார். விழாவில் நடிகர்கள் பரத், விவேக், நடிகை நிலா, கலைப்புலி ஜி.சேகரன், பேரரசு, டி.சிவா, பி.எல்.தேனப்பன், கே.கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment