Wednesday,13th of March 2013
சென்னை::ஒருவழியாக விஸ்வரூபம் சர்ச்சை முடிவுக்கு வந்து அதன் பலாபலன்களை கமல் அனுபவித்து வரும் நிலையில் முதல் பாகத்தில் விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம் என்று கமல்ஹாசன் புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
விஸ்வரூபம் படம் முதல் பாகத்தில் முழுமையாக வைக்க முடியாமல் போன காதல், தாய்-மகன் பாசம், போர்க்களக் காட்சிகளை 2ம் பாகத்தில் காணலாம் என்று கூறியுள்ளார் கமல்.
படம் தேறுமா தேறாதா, ஓடுமா, ஓடாதா என்று கடும் சஞ்சலத்தில் டீ.டி.எச். என்றெல்லாம் சர்ச்சைகளில் சிக்கி பிறகு இஸ்லாம் சமயத்தினரின் கோபத்திற்கு ஆளாகி படம் ஒருவழியாக ரிலீஸ் ஆகி அமோக லாபத்தை பெற்றுத் தந்துள்ளது.
இந்த நிலையில் விடுபட்ட காட்சிகளை 2ம் பாகத்தில் காணலாம் என்று கூறியுள்ளார் கமல்.
இந்த படத்தில் மேலும் சில காட்சிகளை சேர்த்து போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து விட்டால் படம் ரிலீசுக்குத் தயார்.
இரண்டாம் பாகம் பற்றி கமல் கொடுத்த பேட்டியில், விஸ்வரூபம் படத்தினால் லாபம்தான். படத்தின் இணைத் தயாரிப்பாளரான எங்கள் அண்ணன் என்னை கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.
2ஆம் பாகத்தில் போர்க்களக் காட்சிகள் பிரதானமாக இடம்பெறும். மேலும் முதல் பாகத்தில் மிஸ் ஆகி விட்டதாக ரசிகர்கள் நினைத்த ரொமான்ஸ் காட்சிகள் 2ஆம் பாகத்தில் நிச்சயம் இடம்பெறும்.
அதேபோல் தாய்ப்பாசம் தொடர்பான காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்றார் கமல்
Comments
Post a Comment