துப்பாக்கி 2ஆம் பாகம் கிடையாது - முருகதாஸ்!!!

Friday,1st of March 2013
சென்னை::துப்பாக்கி 2ஆம் பாகம் இப்போதைக்கு இல்லை என தெ‌ரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அ‌ஜீத்தை வைத்து படம் இயக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று முருகதாஸ் கூறியதற்கு அ‌‌ஜீத் தரப்பிலிருந்து பாஸிடிவான சமிக்ஞை வரவில்லை. இதனால் தனது பார்வையை மீண்டும் விஜய் பக்கம் திருப்பியுள்ளார்.

துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெய‌ரில் இந்தியில் முருகதாஸ் இயக்குகிறார். அக்சய் குமார் ஹீரோ. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் விஜய்யை இயக்குகிறார். ஆனால் அது துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என அவர் தெ‌ரிவித்துள்ளார்.

தற்போது தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து நேசன் இயக்கத்தில் ‌ஜில்லா படத்தில் நடிக்க உள்ளார். அதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.

Comments