Friday,8th of March 2013
சென்னை::ஒரே மேடையில் ரஜினி, கமல் தோன்றுகின்றனர். குறிப்பிட்ட சில விழாக்களில் மட்டுமே ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து கலந்துகொள்வார்கள். இப்போது இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் இணைப்பதற்கான முயற்சியில் பிரபு, லிங்குசாமி ஈடுபட்டுள்ளனர். பிரபு மகன் விக்ரம் பிரபு, லிங்குசாமி தயாரித்த ‘கும்கி படத்தில் அறிமுகமானார். இதை பிரபு சாலமன் இயக்கினார். இப்படத்தின் தொடக்க விழா நடந்தபோது ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற ரஜினி கூறும்போது,‘பிரபு தனது மகன் விக்ரமின் பட தொடக்க விழாவுக்கு அழைத்தபோது உடல் நிலை சரியில்லாததால். நேரில் வர இயலாது என்றேன்.
ஆனாலும் சினிமாவின் மூத்த மகன் சிவாஜியின் இல்லத்திலிருந்து ஒருவர் அறிமுகமாகும்போது அதில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதனால் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றேன்‘ என்றார். இந்த விழாவில் கமல்ஹாசனும் கலந்துகொண்டு வாழ்த்தினார். ‘கும்கி‘ வெளியாகி 100 வதுநாளை நெருங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் விழாவிற்கான ஏற்பாடுகளை லிங்குசாமி, பிரபு சாலமன் செய்து வருகின்றனர். இவ்விழாவில் ரஜினி, கமல் இருவரையும் பங்கேற்க செய்வதற்கான வேலையில் இரண்டு இயக்குனர்களும், பிரபுவும் ஆர்வமாக இருக்கின்றனர். இதுகுறித்து இருவரையும் சந்தித்து அழைக்க உள்ளனர். ரஜினி, கமல் இருவருக்கும் பொருத்தமான தேதியில் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
Comments
Post a Comment