Tuesday,26th of February 2013
சென்னை::அது என்ன மாயமோ தெரியவில்லை எந்த நடிகை கோடம்பாக்கத்தில் கால் பதித்தாலும், அவர்கள் வந்த வேகத்திலேயே ஆர்யாவின் அபிமானியாகி விடுகிறார்கள். அந்த அளவுக்கு தன்னுடன் நடிக்காத நடிகைகளாகவே இருந்தால்கூட, புதுவரவு நடிகைகளை தேடிப்பிடித்து சென்று நலம்குலம் விசாரிக்கும் ஆர்யா, கம் மாதிரி அவர்களின் மனதில் ஒட்டிக்கொள்கிறார். அடிக்கடி அவர்களுக்கு போன் போட்டும் நட்பை தண்ணீர் ஊற்றி வளர்க்கிறார். இப்படி தன்னுடன் நடிக்காத நடிகைகளையே அவர் விட்டு வைக்காதபோது, தன்னுடன் ஜோடி போட்ட நடிகைகளை விட்டு விடுவாரா என்ன?
அப்படி அவருடன் சேட்டை படத்தில் ஜோடி போட்டுள்ள ஹன்சிகாவிடம் தற்போது நடித்து வரும் சூர்யா, ஆர்யா,சிம்பு, கார்த்தி ஆகியோரில் உங்களுக்கு மிகப்பிடித்தமான நடிகர் யார்? என்று கேட்டால், நொடிப்பொழுதும் யோசிக்காமல் ஆர்யா என்கிறார். காரணம், அவர் பார்ப்பதற்கு ரப்பாக தெரிவார். ஆனால் பழகிப்பார்த்தால் ரொம்ப சாப்ட்டானவர். எப்போதுமே சுயநலம் கருதாமல், மற்றவர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவார். அந்த வகையில், எனக்காக அவர் எவ்வளவோ செய்திருக்கிறார். அதனால் நான் இதுவரை எத்தனை நடிகர்களுடன் நடித்திருந்தாலும், அவர்களில் என் மனதில் இடம் பிடித்தவர் யார் என்றால், அது ஆர்யாதான் சொல்வேன். இதனால் மற்ற ஹீரோக்கள் கோபித்துக்கொண்டாலும் எனக்கு கவலையில்லை. காரணம் மனதில் உள்ளதை எனக்கு மறைக்கத் தெரியாது என்கிறார் ஹன்சிகா
Comments
Post a Comment