நான் இந்தி நடிகை இல்லை; இந்திய நடிகை: ராதிகா ஆப்தே சிறப்பு பேட்டி!!!

Friday,15th of February 2013
சென்னை::இந்தி மற்றும் பெங்காலி மொழியில் நடித்துக் கொண்டிருந்த ராதிகா ஆப்தேவை "தோனி"யில் தமிழுக்கு அழைத்து வந்தார் பிரகாஷ்ராஜ். பெரிய ரவுண்ட் வருவார் என்று கருதப்பட்ட ராதிகாவுக்கு இப்போது தமிழில் "வெற்றிச்செல்வன்" மட்டுமே இருக்கிறது. இந்தி பெங்காலியில் வழக்கம்போல ரவுண்டு கட்டி நடிக்கிறார். வெற்றிச்செல்வன் படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருந்தவர் அளித்த சிறப்பு பேட்டி:

* தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லையே ஏன்?

நான் தமிழ் நடிகை இல்லையே... பேசிக்கா நான் பெங்காலி நடிகை. இப்பவும் 3 பெங்காலி படத்துல ஒரே நேரத்துல நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் வரவில்லை. சென்னையில் இருந்து வாய்ப்பு தேடவும் இல்லை. நார்த்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். யாராவது தேடி வந்து இந்த கேரக்டருக்கு நீங்கதான் பொருத்தமா இருப்பீங்க என்று வந்தால் நடிக்கிறேன்.

* வெற்றிச் செல்வன் வாய்ப்பு எப்படி?

நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி என்னை தேடிவந்த வாய்ப்பு. படத்துல நான் லாயரா நடிச்சிருக்கேன். சின்ன வயசுல பெரிய லாயராகணும்னு ஆசை இருந்துச்சு. அது சினிமாலதான் நிறைவேறியிருக்கு. படத்தை பற்றிய கதையை இயக்குனர் ரகசியமா வச்சிருக்கிறதால இதுக்குமேல அதுபத்தி பேச முடியாது.

* முதல் படத்துலேய பாலியல் தொழிலாளியா நடிச்சீங்களே எப்படி?

தோனி பற்றி கேக்குறீங்களா? தமிழ்லதான் அது முதல் படம். எனக்கு பதினைந்தாவது படம். அது மாதிரி நிறைய நடிச்சிருக்கேன். நான் நடிக்கிற பெங்காலி படங்கள் எல்லாமே ரொம்ப யதார்தமான படங்கள். டூயட், கிளாமர்லாம் இருக்காது. கொடுக்குற கேரக்டரை வாழ்ந்துட்டு போகணும்.

* கிளாமரா நடிக்க மாட்டீங்களா?

நடிக்க வந்துட்டு அப்படி நடிக்க மாட்டேன்னு இப்படி நடிக்க மாட்டேன்னு பாலிசி வச்சிக்குறது தப்பு. கதையும், கேரக்டரும் சூப்பரா இருந்து. அதுல என்னால நடிக்க முடியும்னு தோணிச்சுன்னா எந்த கேரக்டர்லேயும் நடிப்பேன்.

 * உங்களுக்கும் அஜ்மலுக்கும் சின்ன உரசல் இருந்திச்சுன்னு சொல்றாங்களே?

ஒரே இடத்துல வேலை செய்யறவங்களுக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் வர்றதெல்லாம் ரொம்ப சகஜம். அப்படி வந்துச்சு. அப்புறம் சில நாள்லேய சரியாயிடுச்சு. எங்க வேலைய கரெக்டா செஞ்சு கொடுத்துட்டோம். அஜ்மல் இப்போ நல்ல பிரண்ட்.

* அமெரிக்கா மியூசிக் டைரக்டர் ஒருத்தரை லவ் பண்றிங்களாமே?

அது பர்சனல் விஷயம். அதான் கேள்வியிலேயே சொல்லிட்டீங்க. அதுக்குமேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல.

* மியூசிக்ல இண்ட்ரஸ்ட் இருக்குதா?

பெங்காலி படங்கள்ல பாடியிருக்கேன். நல்லா பியானோ வாசிப்பேன். தமிழ் பாட்டு ரொம்ப புடிக்கும். அர்த்தம் புரியலேன்னாலும் இளையராஜா, ரகுமான் சாரோட பெரிய ரசிகை.

* தமிழ்ல தொடர்ந்து நடிப்பீங்களா?

நான் எந்த லாங்குவேஜ்குள்ளும் என்னை சிக்க வச்சிக்க மாட்டேன். நல்ல கேரக்டர் அமைஞ்சா நடிப்பேன். இல்லேன்னா வேற லாங்குவேஜ்ல நடிச்சிட்டிருப்பேன். நான் இந்தி நடிகை இல்லை. இந்திய நடிகை.

Comments