விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்!!!
Friday,1st of February 2013
சென்னை::மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘கடல்’ இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். கார்த்திக் மகன் கவுதம் கதாநாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் இதில் அறிமுகமாகியுள்ளனர். அர்ஜுன், அரவிந்தசாமியும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் சென்னையில் விஸ்வரூபம் படத்துக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் ‘விஸ்வரூபம்’ படம் வர இருந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.
இதேபோல், ‘டேவிட்’ படமும் இன்று வெளியாகியுள்ளது. இதில், விக்ரம், ஜீவா, இணைந்து நடித்துள்ளனர். தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தையும் ‘விஸ்வரூபம்’ படம் வெளியாக இருந்த தியேட்டர்களில் திரையிட்டு உள்ளனர்.
எனவே, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை நீங்கினாலும் உடனடியாக இவ்விரு படங்களையும் எடுத்து விட்டு தியேட்டர்களை ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ஒதுக்குவதில் சிரமங்கள் இருக்கும் என்கின்றனர்.
Comments
Post a Comment