Tuesday,5th of February 2013
சென்னை::நிஷா அகர்வால் நடித்த தெலுங்கு படம் தமிழுக்கு வருகிறது. காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால். தமிழில் ‘இஷ்டம் படத்தில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தெலுங்கில் நடித்த ‘சோலோ என்ற படம் தமிழில் ‘என் காதலுக்கு நானே வில்லன் என்ற பெயரில் வெளி வருகிறது. ரோஹித் ஹீரோ. பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சாயாஜி ஷிண்டே, முமைத் கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மணிசர்மா இசை.
ஷிவேந்திரன் ஒளிப்பதிவு. பரசுராம் இயக்கம். கே.எஸ்.மணி தயாரிப்பு. படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘இதுநாள் வரை தன்னிச்சையாக வாழ்ந்துவிட்டோமே என்று வருந்தும் ஹீரோ தனக்கு வரும் மனைவியாவது சொந்த பந்தங்களுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இதே எண்ணத்தில் அவனை காதலிக்கும் பெண்ணும் நினைக்கிறாள். அவர்களது ஏக்கம் நிறைவேறுகிறதா என்பது கதை என்றார்
Comments
Post a Comment