Tuesday,19th of February 2013
ஹைதராபாத்::ஹைதராபாத்தில் நடந்த சிசிஎல் போட்டியில் ஆடிய சென்னை ரைனோஸ் அணிக்கு ஆதரவாக ஸ்ருதி ஹாசன் தனது தங்கை அக்ஷராவுடன் வந்திருந்தார்.
திரையுலக நட்சித்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் கடந்த 16ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் துவங்கி 6 ஓவர்கள் மட்டுமே ஓடிய நிலையில் கன மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை அணியை ஊக்குவிக்க ஸ்ருதி ஹாசன் தனது தங்கை அக்ஷராவுடன் வந்திருந்தார். அவர் கூறுகையில், நானும் என் தங்கையும் சேர்ந்து சிசிஎல் போட்டிக்கு வருவது இது தான் முதல் முறை. அந்த போட்டியும் ரத்தானது வருத்தமாக உள்ளது என்றார். அக்காவும், தங்கையும் ஸ்டேடியத்தில் இருந்த பிற நடிகைகளுடன் கலந்துரையாடினர்.
Comments
Post a Comment