Thursday,7th of February 2013
சென்னை::ஆக்சனுக்கு பேர்போன அர்ஜூனுக்கு சமீபகாலமாக ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காததால் தனது ரூட்டை மாற்றுகிறார். வசந்த் இயக்கி வரும் 3 பேர் 3 காதல் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பவர், தற்போது வெளியாகியுள்ள மணிரத்னத்தின் கடல் படத்தில் அதிரடி வில்லனாக உருவெடுத்திருக்கிறார். அப்படம் திரைக்கு வரும் வரை அர்ஜூன் அந்த மாதிரி ஒரு வேடத்தில் நடித்திருப்பார் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் படத்தைப்பார்த்து விட்டு அர்ஜூனா இப்படி அதிரடி வில்லனாக நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், மேலும் சில இயக்குனர்களும் அர்ஜூனை தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கினர். ஆனால் அதற்கு மறுத்து விட்டார் அர்ஜூன். மணிரத்னம் எனக்கு மிக பிடித்தமான இயக்குனர். அதனால்தான் அவர் கடல் படத்துக்கு என்னை அழைத்தபோது என்ன கதை, என்ன கேரக்டர் என்றுகூட கேட்காமல் நடித்தேன். அது வில்லன் என்று தெரிந்தபோதுகூட எனக்கு வருத்தமோ, வெறுப்போ கிடையாது. மணிரத்னம் சொன்னால் எந்த மாதிரியான வேடத்திலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணமே என் மனதளவில் இருந்ததால் அந்த கதாபாத்திரத்தை முழுசுமாக உணர்ந்து அனுபவித்தே நடித்தேன் என்கிறார் அர்ஜூன்
Comments
Post a Comment