Thursday,21th of February 2013
சென்னை::விமர்சனத்துக்காக காத்திருக்கிறேன் என்றார் டாப்ஸி. அவர் அளித்த பேட்டி: ஷூட்டிங் முடிந்ததோடு வேலை முடிந்துவிடுவதில்லை. அடுத்து அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வேலை இருக்கிறது. பாலிவுட்டில் இப்போதெல்லாம் ஆன்லைன் மற்றும் மீடியாக்கள் மூலமாக புரமோஷன் செய்வது அதிகரித்துவிட்டது. இந்தியில் நான் நடித்துள்ள ‘சஷ்மே பத்தூர் என்ற படத்தின் புரமோஷன் பணிக்காக, அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறேன்.
பேட்டி மற்றும் சில நேரடி ஷோக்களில் பங்கேற்கிறேன். இதற்காக மும்பை சென்றிருக்கிறேன். ரொம்பவும் சுட்டித்தனமான வேடம் ஏற்றிருக்கிறேன். எனது நிஜ கேரக்டரும் இதுதான். இப்படத்தில் எனது நடிப்பு எப்படி இருக்கிறது என்பதற்கான விமர்சனங்களுக்காக எதிர்பார்த்திருக்கிறேன். தற்போது லாரன்ஸ் இயக்கும் முனி 3ம் பாகம், விஷ்ணுவர்தன் படங்களில் நடித்து வருகிறேன். விஷ்ணு பட ஷூட்டிங் துபாயில் நடக்கிறது. ஆனால் அங்கு எனக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அடுத்த ஷெட்டியூலில்தான் அப்பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன் என்றார்.
Comments
Post a Comment