'தலைவா' அரசியல் படம் அல்ல : விஜய்!!!

Monday,2th of February 2013
சென்னை::'துப்பாக்கி' படத்தின் மூலம் பெரும் வெற்றியை கொடுத்த விஜய், தற்போது தலைவா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்திற்கு முதலில் தலைவன் என்ற தலைப்பு வைக்கபப்ட்டது. பிறகு அந்த தலைப்பை வேறு ஒருவர் பதிவு செய்து படம் எடுத்து வருவதால் அதை கைவிட்ட விஜய் தரப்பு படத்திற்கு பொறுத்தமான தலைப்பை தேர்வு செய்து வந்தது.

தங்க மகன் உள்ளிட்ட பல தலைப்புகளை பரீசிலித்த விஜய் தரப்பு இறுதியில் 'தலைவா' என்ற தலைப்பை தேர்வு செய்தது. இதன் மூலம் இப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கலாம் என்று பேசப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய், "துப்பாக்கி படத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் எனக்கு பொறுப்பு கூடி இருக்கிறது. இன்னும் நல்ல படங்கள் பண்ணுவேன். நான் நடித்துக் கொண்டிருக்கும் தலைவா அரசியல் படம் அல்ல. அரசியல் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை. படம் பார்க்கும்போது தலைவா என்ற தலைப்பு வைத்ததன் நோக்கம் தெரியவரும்.

துப்பாக்கி படப்பிடிப்பில் இருந்தபோதுதான் இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவா படத்தின் கதையை சொன்னார். அவர் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் விதம் வித்தியாசமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா படத்துக்கு பெரிய ப்ளஸ் காட்சிகளை புதுமையாக உருவாக்குகிறார். படம் சிறப்பாக வந்துள்ளது." என்றார்.

Comments