Thursday,28th of February 2013
சென்னை::சென்ற வார இறுதியில் தமிழகத்தில் வெளியானது போலவே அமீரின் ஆதிபகவன் யுகே, யுஎஸ் ஸில் வெளியானது. விஸ்வரூபம் ஐந்தாவது வாரமாக இவ்விரு நாடுகளிலும் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமீரின் ஆதிபகவன் முதல்வார இறுதியில் யுகே யில் ஒன்பது திரையிடல்களில் 1,0849 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 8.91 லட்சங்கள்.
யுகே யில் விஸ்வரூபம் ஐந்தாவது வார இறுதியில் - அதாவது சென்ற வார இறுதியில் 11 திரையிடல்களில் 4,024 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 3,08,350 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 2.53 கோடிகள்.
யுஎஸ் ஸில் அமீரின் ஆதிபகவன் வார இறுதியில் 14 திரையிடல்களில் 13,119 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் 7.07 லட்சங்கள்.
விஸ்வரூபம் ஐந்தாவது வார இறுதியில் யுஎஸ் ஸில் ஐந்து திரையிடல்களில் 4,184 டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 1,034,091 டாலர்கள். ரூபாய் மதிப்பில் 5.57 கோடிகள்.
இந்த வருடம் வெளியான படங்களில் விஸ்வரூபமே வெளிநாடுகளில் அதிக வசூலைப் பெற்று முன்னணியில் உள்ளது. அதேபோல் கமல்ஹாசன் படங்களில் வெளிநாடுகளில் அதிக வசூலை பதிவு செய்திருப்பதும் விஸ்வரூபமே என்பது முக்கியமானது.
விஸ்வரூபம், ஆதிபகவன், வசூல், யுகே, யுஎஸ்
Comments
Post a Comment