மீண்டும் ஜெயம்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி!!!

Wednesday,20th of February 2013
சென்னை::சில நிறுவனங்களின் பெயரைக் கேட்டாலே மரியாதை மனசுக்குள் பொங்கும்! தமிழ்த்திரையில், தரம், பொழுதுபோக்கு இரண்டையும் இரண்டு கண்களாகக் கொண்டு, அதிரி புதிரியான படங்களை அடுத்தடுத்து கொடுத்து வரும் நிறுவனம்தான் ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயிண்மெண்ட். இந்த நிறுவனத்தின் 12-வது படைப்புக்காக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் அதிரடி ஆக்‌ஷன் தம்பியான ஜெயம் ரவியும், இயக்குநர் ஜெயம் ராஜாவும்.

புத்தம்புது கதை, திகு திகு திரைக்கதை, கலர்ஃபுல் மேக்கிங் என ஒவ்வோரு ஷாட்டிலும் கலக்கும் அண்ணன் ஜெயம்ராஜாவும்! இதை ஜெயம்ராஜாவே அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்கிறார். இப்படி… “ பிரபலமான ஏ.ஜி.எஸ் நிறுவனதுக்காக ஜெயம்ரவியும் நானும் மீண்டும் கரம் கோர்க்கிறோம்! உண்மைதான்!”

இளையதளபதி விஜய் நடிக்க, தமிழ்சினிமாவின் நிஜமான சூப்பர் ஹீரோ படமான ‘வேலாயுததை’ இயக்கி முடித்து சூப்பர் டூப்பர் வெற்றி கொடுத்துவிட்டு எங்கேபோனார் ஜெயம்ராஜா என்று மொத்த ரசிகர்களும் தேடிக்கொண்டிருக்க, கடந்த ஆறு மாதங்களில் பக்காவான திரைக்கதைக்காக உழைத்து முடித்திருக்கிறார் ஜெயம்ராஜா!

ஒரு வெற்றியா…! இரு வெற்றியா…! அடுத்தடுத்து நான் –ஸ்டாப்பாக ஆறு வெற்றிகளைக் கொடுத்த சூப்பர் ஹிட் இயக்குனர் எம்.ராஜா! முக்கியமாக தம்பியுடன் இணைந்து பணியாற்றிய ’ஜெயம்’, ‘எம்.குமரன். சன் ஆஃப் மகாலட்சுமி’, ’உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’ என ஐந்து படங்களுமே அதிரடி வெற்றிகளாக அமைந்ததில், இந்த அண்ணந் தம்பி கூட்டணிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே எகிரும் எதிர்பார்ப்புத்தான்!

அப்படியிருக்க ஆறாவது முறையாக இவர்கல் கூட்டணி அமைத்தால் அணு உலையைவிட ஹாட் டாபிக் ஆவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை! இந்தக் கூட்டணி இந்தமுறை தரப்போகும் ஜானர் என்ன!? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு இயக்குனர் ஜெயம்ராஜாவே பதில் தருகிறார்… “ சர்வ நிச்சயமாக இதுஒரு ஆக்‌ஷன் படம்! ஆனால் குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை நகரும்! ஆனால் ஆக்‌ஷன் வகை திரைப்படங்களில் புத்தம்புது டைமன்ஷனில் காட்சிகள் அமைக்கப் போகிறோம்! அந்தவகையில் தமிழ்சினிமாவின் மாஸ் ஹீரோ ஆக்‌ஷன் ஜானர் படங்களில் இந்தப் படம் கண்டிப்பாக புதிய எல்லைகளைத் தொடும். திரைக்கதை அதற்கு துணையாக இருக்கும்” என்று எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் ஜெயம்ராஜா… தற்போது இந்தப் படத்தில் பங்குபெற இருக்கு மற்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்வதில் துறுதுறுவென்று இயங்கிக் கொண்டிருக்கிறார்! படப்பிடிப்பு…!? அணல் பறக்கும் கோடையின் ஆரம்பமான மே மாதம் தொடங்குகிறது! ஜெயம்ராஜா + ஜெயம்ரவி = இரட்டை வெற்றி!

Comments