கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday,19th of February 2013
சென்னை::‘சிங்கம் 2 படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி. இவரது பூர்வீகம் ஆப்ரிக்கா. முரட்டுத்தனமான கருப்பு உருவம்கொண்ட இவருடன் பயங்கர சண்டை காட்சிகளில் நடிக்கிறார் சூர்யா.

முகமூடி படத்துக்கு பிறகு புதிய படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார் மிஷ்கின். ‘லோன் உல்ப் என நிறுவனத்துக்கு பெயரிட்டிருக்கிறார்.

ஷங்கர் இயக்க விக்ரம் நடிக்கும் ‘ஐ படத்துக்கு இதுவரை 3 பாடல்கள் ஒலிப்பதிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். மற்றொரு பக்கம் பாடல் காட்சிகளை தனது பாணியில் பிரமாண்டமாக படமாக்குகிறார் இயக்குனர்.

இந்தியில் வித்யாபாலன் நடித்த ‘கஹானி தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார். கர்ப்பிணியாக நடிக்கும் நயன்தாரா இதற்காக ஏப்ரல் மாதம் ஷூட்டிங் கால்ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

ராணா நடித்த ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் தெலுங்கு படத்தில் குத்துப்பாடலுக்கு ஆட்டம்போட சமீரா ரெட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘தெனாலிராமன் படம் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளார் வடிவேலு. இதற்கிடையில் ஏப்ரல் 7ம் தேதி தனது மகளின் திருமணத்தை மதுரையில் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இதில் அரசியல் முக்கிய பிரமுகர்கள், டாப் நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

அருண் விஜய்கார்த்திகா நடிக்கும் ‘டீல் பட ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்துக்காக ஹீரோ காரை வேறு 10 கார்களில் வில்லன் கூட்டம் துரத்தும் காட்சியை படமாக்கினார் இயக்குனர் சிவஞானம். இதில் அருண் விஜய் ஓட்டிச் சென்ற காரின் விலை ரூ.70 லட்சமாம்.

‘சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்த தீபா ஷா ஏற்கனவே ‘யுத்தம் செய் படத்தில் நடித்திருந்தார்.

விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா நடிக்க பாண்டிராஜ் இயக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Comments