விளம்பரத்துக்காக டுவிட்டரில் சேரவில்லை : லட்சுமிராய் விளக்கம்!!!

Thursday,21th of February 2013
சென்னை::டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்றார் லட்சுமிராய். அவர் கூற¤யது: தெலுங்கில் கோடி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இது முழு நீள ஹீரோயின் சப்ஜெக்ட் படம். அதனால் எனக்கு பெரிய ரோலை கோடி ராமகிருஷ்ணன் கொடுத்துள்ளார். இத்தனை நாள் இதுபோன்ற ஒரு வேடத்துக்காகவே காத்திருந்தேன். மலையாளத்தில் ஏபிஎஸ் படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறேன். சங்கீத் சிவன் இயக்கும் படமும் கைவசம் உள்ளது. தமிழில் ஒன்பதுல குரு படத்தில் நடிக்கிறேன். நானும் ஐந்து ஹீரோக்களும் காரில் செல்கிறோம். சாலை பயணத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து காமெடியாக காட்சிகள் நகரும். இந்த படத்தில் 2 வித கேரக்டரில் நடித்துள்ளேன்.

மங்காத்தா படத்துக்கு பிறகு பிரேம்ஜியுடன் இதில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருந்தாலே கலகலப்பாக இருக்கும். டுவிட்டர் மூலம் பலர் பல விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். நான் முழுக்க ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக மட்டுமே டுவிட்டர் பக்கத்தை ஆரம்பித்தேன். அதற்கு பலனும் கிடைத்த¤ருக்கிறது. மற்றபடி விளம்பரத்துக்காக டுவிட்டரில் இல்லை. ஷூட்டிங் இல்லாதபோது குடும்பத்துடன் கோயில்களுக்கு செல்வது பிடிக்கும். கோயில்களில¢ என்னை பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். எனக்கு கடவுள் பக்தி அதிகம் என்பது பலருக்கு தெரியாது. அதனால் அதிர்ச்சியடையலாம். எனது ஆன்மிக நம்பிக்கையால்தான் சினிமாவில் தொடர்ந்து ஜெயித்து வருகிறேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.

Comments