தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன் : டாப்ஸி பேட்டி!!!

Sunday,3st of February 2013
சென்னை::டாப்ஸிக்கு 21 வயசு பிறந்தது. ‘ஐ’ ஷூட்டிங்கில் இருந்த அவர் கூறியதாவது: போன வருஷமும் பிறந்தநாளின்போது மும்பையில் ஷூட்டிங்கில் இருந்தேன். இந்த வருடம் ‘ஐ’ பட ஷூட்டிங்கில் இருக்கிறேன். இம்முறை எனது அப்பா லண்டனிலிருந்து வந்திருந்தார். கடந்தமுறை ‘மதராசபட்டணம்’ ரிலீஸ் ஆனபோது அப்பா வந்திருந்தார். இம்முறை அப்பாவுடன் சென்று விக்ரம் நடித்த படத்தை பார்த்தேன். அவருக்கு சென்னையை சுற்றிக் காட்டினேன். ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம்.

அவர் இயக்கிய ‘எந்திரன்’, ‘ஜீன்ஸ்’ படங்களை பார்த்தேன். அவ்வளவு பெரிய இயக்குனருடன் பணியாற்றுவதுபற்றி அறிந்து எனது அப்பா எனக்கு வாழ்த்து சொன்னார். இதற்கு முன் ஏற்று நடித்த வேடங்களில் இருந்து இந்த வேடம் மாறுபட்டிருக்கும். நிறைய தமிழ் வசனங்கள் பேசுவதால் முதலிலேயே அந்த வசனங்களை கேட்டு வாங்கி மனப்பாடம் செய்து பேசிப்பார்த்து பயிற்சி செய்கிறேன். இது என் திரையுலக வாழ்வில் முக்கிய படமாகும். இப்போதைக்கு தென்னிந்திய படங்களில்தான் கவனம் செலுத்துகிறேன். முதலில் இங்கு ஒரு இடத்தைபிடித்தபிறகுதான் பிறமொழிகளில் நடிப்பதுபற்றி கவனம் செலுத்துவேன்.

Comments