Thursday,7th of February 2013
சென்னை::தமிழகம் முழுவதும் ‘விஸ்வரூபம் படம் இன்று வெளியானது. தியேட்டர் முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
கமல்ஹாசன் நடித்து இயக்கி உள்ள ‘விஸ்வரூபம் படம், சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் 2 முறை இப்படம் வெளியாவதாக அறிவித்து, தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, இன்று தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. சென்னையில் மட்டும் 40 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
காலையிலேயே கமல் ரசிகர்கள் தியேட்டர்கள் முன் திரண்டனர். மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு தொங்கியது. ஏற்கனவே மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ‘விஸ்வரூபம் ரிலீஸ் ஆனது. முன்னதாக இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அரசும் தடை விதித்திருந்தது. இப்பிரச்னைகள் கோர்ட் வரை சென்றது. இறுதியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்பட்டது.
Comments
Post a Comment