Monday,2th of February 2013
சென்னை::மனதை கொள்ளை கொள்ளும் இசையால் ஏராளமான ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
ஆஸ்கார் விருதை வென்று எடுத்த இந்திய குடிமகன் என்ற பெருமையைப் பெற்ற ஏ.ஆர். ரஹ்மான், நீண்ட நாளாக ஒரு கதையை எழுதி வருவதாகவும், அதனை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் கதை சொல்லும் பாணி அழகாக இருக்கும் என்றும், அவரால் நிச்சயமாக ஒரு நல்ல படத்தை இயக்க முடியும் என்றும் அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
நல்ல இசை அமைப்பாளரால் நல்ல இயக்குநராக முடியாதா என்ன? பொருந்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment