நடிப்பதைவிட டைரக்ஷன் செய்ய நிறைய வாய்ப்புகள் வந்தாலும் நடன இயக்குனராக பணியாற்றவே விரும்புகிறேன்: பிரபு தேவா!!!

Wednesday,6th of February 2013
சென்னை::ஏ.பி.சி.டி.' என்ற பெயரில் 3 டி.யில் வெளியாகும் இந்தி படத்தில் பிரபு தேவா நடித்துள்ளார் 'ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகும் இந்த படம் வரும் 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தனது ஆசைகளை பற்றி மும்பையில் மனம் திறந்த பிரபு தேவா கூறியதாவது:-

நடிப்பதை விட டைரக்ஷன் செய்வதற்கு தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எல்லோரும் என்னை டைரக்டராக பார்க்க விரும்புகின்றனர். இதனால், நடிப்பதை விரும்பவில்லை என்று கூறிவிட முடியாது. நடன அமைப்பு, டைரக்ஷன், நடிப்பு இவை எல்லாமே என் வேலையின் ஒரு பகுதியாக இருந்தாலும், நடன இயக்குனராக பணியாற்றுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்.

என்னுடைய முதல் ஆர்வம் நடனம் அமைப்பது தான். தற்போது டைரக்ஷனில் நான் பிசியாக இருக்கிறேன். நான் சற்று ஒய்வாக இருக்கும் சூழ்நிலையில் நடனம் அமைப்பதற்கு என்னை யாராவது அனுகினால் கண்டிப்பாக அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வேன். ஏ.பி.சி.டி. நான் நடிக்கும் முதல் படமல்ல.

இந்திய படங்களில் எல்லாம் நடனம் என்பது ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. நம் திரையுலகில் நிறைய நடன இயக்குனர்கள் இருக்கிறார்கள். நான் நடிக்கும் படங்களுக்கு நான்தான் நடனம் அமைக்க வேண்டும் என கருதுவதில்லை. ஒரு நடிகன் என்று வரும்போது நடிப்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments