Sunday,10th of February 2013
சென்னை::மன்மதன் படத்திற்கு பிறகு கவுண்டமணி சினிமாவில் நடிக்கவில்லை. மன்மதனில் 10 காட்சிகள் வரை எடுத்து அதை எல்லாம் வெட்டி எறிந்து விட்டு வெறும் மூன்று காட்சிகள் மட்டுமே படத்தில் இருந்தது. இதனால் வெறுத்து ஒதுங்கிய கவுண்டமணி இனி இந்த சின்னப் பசங்களோட நடிக்க மாட்டேன்னு விலகி நின்றார். பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்து கொள்வதில்லை. இடையில் உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மூன்று முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். என்றாலும் டி.நகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து நண்பர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். ஆர்வமாக கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு அதில் நடிக்கவில்லை என்றாலும் தக்க ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். மாலை நேரத்தில் அலுவலக மொட்டை மாடியில் நடை பயறிச்சி செய்து கொண்டிருந்தார். இப்போது முழு ஆரோக்கியம் பெற்று விட்டதால் சினிமாவில் நடிக்க டாக்டர்கள் பச்சைக்கொடி காட்விட்டார்கள்.
இதைத் தொடர்ந்து தீவிரமாக கதை கேட்ட கவுண்டமணி 50 கதைகள் வரை நிராகரித்துவிட்டு தற்போது "வாய்மை" என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பாக்யராஜ் மகன் சாந்தனு, தாமிரபரணி பானு ஜோடியாக நடிக்கிறார்கள். அ.செந்தில்குமார் இயக்குகிறார். இதில் கவுண்டமணி டாக்டர் பென்னியாக நடிக்கிறார். ஒழுங்காக டாக்டர் வேலை செய்து கொண்டிருக்கும் கவுண்டமணியை சிலர் சினிமாவில் நடிக்கச சொல்லி வற்புறுத்துவார்களாம். அதற்கு கவுண்டர் கொடுக்கும் கவுண்டர்தான் காமெடி ஏரிவாயம். படம் முழுக்க எல்லாத்தையும் வாருகிறாராம். சினிமாவில் இப்போது கலக்கும் டாக்டர்களை கலாய்க்கிற மாதிரி இருக்குமாம்
Comments
Post a Comment