Monday,18th of February 2013
சென்னை::தனுஷ் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் மரியான். பரத்பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக கடலுக்குள் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்ட இயக்குநர் பரத்பாலா, அதன்படி ஒரு படகில் தனுஷ், அப்புக்குட்டி இருவரையும் அமைர வைத்து கடலுக்குள் சென்று படமாக்கினார். அப்போது தீடீரேன்று வீசிய பலத்த காற்றால் தனுஷ், அப்புக்குட்டி இருந்த படகு தலைகிழாக கவிழ்ந்துவிட்டது. ஆனால், உடனே பாதுகாப்புக்காக உடன் சென்றிருந்த மீனவர்கள் தனுஷையும், அப்புக்குட்டியையும் காப்பாற்றி விட்டார்கள். இவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் சில நேரங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment